May 21, 2009

The Divine Name is God - Papa Ramdas - நாமமே இறைவன்!

Swami Ramdas (Papa Ramdas) was known as Vittal Rao in his pre-Sanyas days. Around the year 1920, he was made to think deeply on the futility of worldly pursuits and the absolute necessity of pursuing the divine path for realizing his identity with the Supreme Being, as a result of which alone he can get eternal peace. He placed himself totally at the altar of God. Intense aspiration coupled with intense practice to attain the Highest quickened his spiritual progress and in a short time he had the vision of beholding his Beloved God everywhere, both within and outside. This resulted in getting himself established in unending Bliss. His whole life then hinged around the Lord and wherever he went, what ever He did, the Lord was all along with him. He strongly advocated the chanting of the divine Name of the Lord. This is an article published by "Ananda Ashram" of Kanchangad", Kerala, an ashram set up by Papa Ramdas. http://www.anandashram.org/ நாமமே இறைவன்! இறைவனும் அவருடைய திருநாமமும் வெவ்வேறு அல்ல. திருநாமம் இறைவனே. அவருடைய திருநாமம் மனதில் தோன்றியவுடன், உள்ளம் இறைவனின் சாந்நித்தியதினால் நிரம்புகிறது. நமது சிந்தனைகளை இறைவன்பால் நிறுத்த அவருடைய திருநாமத்தை இடையறாமல் நினைவு கூர்வதைவிட எளிமையான வழி வேறேதும் இல்லை. இறைவனின் நாமத்தை உரக்க ஜபம் செய்யும் போது, நமது இதயத்தில் ப்ரேமை என்னும் வெள்ளம் பெருக்கெடுத்து பரவச நிலை அடைவதை உணரலாகிறோம். ஏனெனில் திருநாமத்தின் ஒலி நம் மனதை விழிப்புறச் செய்து இறைவனின் அன்பையும் பேரானந்தத்தையும் உணரச் செய்கிறது. இறைவனின் திவ்யநாமததை உரக்கச் சொல்வதைவிட மனதில் ஜபம் செய்வது மிக சிறந்ததாயினும், நாமத்தை உரக்கச் சொல்வதில் எழும் இனிமையும், ஆனந்தமும் ஒப்பற்கரிய அனுபவம் ஆகும். பக்தனின் மனம் இசையில் லயிக்கும்பொழுது மெய்சிலிர்த்து அவனுக்கு நாமமே ப்ரம்மம் என்ற அனுபவம் கிட்டுச்கிறது. இறைவன் ஸ்ருஷ்டிக்கு உட்பட்டவரும் அதே சமயம் ஸ்ருஷ்டிக்கு அப்பாற்பட்டவரும் ஆவார். திருநாமம் இத்தகைய இறைவனைக் குறிக்கிறது. இங்கு எங்கும் நிறைந்த எல்லையில்லாத மாற்ற்மே இல்லாத அமைதியான தத்துவமே ஸ்ருஷ்டிக்கு அப்பாற்பட்ட இறைவன் ஆகும். நாம ரூப சலங்கள் கூடிய அனைத்து ஜீவராசிகளையும் வஸ்துக்களையும் அகத்தே உடைய இந்த ப்ரபஞ்சமே இறைவனின் ஸ்ருஷ்டிக்கு உட்பட்ட அம்சம் ஆகும். திருநாமம் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி, அதே சமயம் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டதாகி தனித்துவமும் தனித்துவதிற்கு அப்பாற்பட்ட்துமாகிய இறைவனைக் குறிக்கிறது. இத்தகைய திவ்யநாமம் அனைத்து ஸ்ருஷ்டிக்கும் ஆதியே இல்லாத மூலகாரணமும், அதே சமயத்தில் ஸ்ருஷ்டியும் ஆகும். பூரண பொருளாகிய கடவுள் அநாமியாகிய நாமமே. திருநாமம் ஜீவனை பந்ததிலிருந்து விடுவிக்கிறது. திருநாமம் அவனை ஆன்மீக வாழ்வின் உச்ச நிலைக்கு இட்டுச் செல்கிறது. இருளில் மூழ்கிய குருட்டு ஜீவனுக்கு திவ்ய த்ருஷ்டியை அளிக்கிறது. இறைவனின் திருநாமம் உன்னதம் பொருந்திய விஸ்வ ரூப தரிசனத்தை அளிக்க வல்லது. திவ்யநாமம் ஜீவனை சிந்தனைக்கு எட்டாத இறை அனுபூதி என்னும் மஹோன்னத சிகரதிற்கு உயர்த்த வல்லது. இறைவனின் திருநாமத்தின் சக்தி வெல்ல முடியாதது. வெல்லற்கரியது என்று கருதப்பட்டாலும் மனம் நாமத்தின் இதமான இசையில் ஈர்க்கப்பட்டு பணிவுள்ளதாகவும் மென்மையாகவும் இணக்கமுள்ளதாகவும் மாறுகிறது. நாம மஹிமையால் மனமே இறைவனாக மாறுகிறது. இறைவனின் திருநாமத்தில் தஞ்சம் அடைந்தவன் பல அதிசயங்களை ஆற்ற முடியும். அவன் இயற்க்கையின் சக்திகளை வென்று மனித ஜீவன்களின் மனதில் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்த முடியும். திவ்யநாமம் மனித ஜீவனை நித்யானந்த ப்ரேம ஸ்வரூபமாக மாற்ற முடியும். நாமம் ஒரு தனிப்பட்ட ஜீவனை விராட் ஸ்வரூபனாக (cosmic reality) - அறிவிலியான ஜீவனை இறைவனாக மாற்ற முடியும். திவ்யநாம பஜனை செய்யும் இடத்தில், நாமத்தின் இசை நயம் ப்ரேமையின் மஹிமையைப் பரப்பி அந்த சூழ்நிலையை தூய்மை, அமைதி பேரானந்தம் ஆகியவற்றால் நிரம்பச் செய்கிறது. திவ்யநாமம் பூரணத்துவம் பொருந்தியது. நாமத்தை சொல்வதே த்யானம். அதனால் ஏற்படும் பரவச நிலையே சமாதி. திவ்யநாமம் தான் அன்பு, ஒலி, சக்தி, பேரானந்தம். இறைவனின் திவ்யநாமத்தைப்போல் அனைவரும் ஒருங்கே பின்பற்றக்கூடியதும் அதே சமயம் இறைவனை அடைய எளியதுமாகிய சாதனை முறை வேறெதுவுமில்லை. ஒரு மஹான் கூறியதுபோல் எவருடைய நாவில் எப்பொழுதும் இறைவனின் திவ்யநாமம் குடி கொண்டுள்ளதோ அவரே பந்தத்திலிருந்து விடுபட்டவர் அல்லது ஜீவன் முக்தர் என்பது உண்மையான கூற்றே. எனவே, அருமை தோழர்களே! நீங்கள் எந்த இனம், குலம், கோட்பாடு அல்லது நிறத்தைச் சார்ந்தவராயினும் இறைவனின் நாமத்தை ஏற்றி அதன் இனிய உறவை உணர்ந்து கொள்ளுங்கள். நாமம் என்னும் அமுதத்தில் இடையறாமல் மூழ்கும் உங்கள் ஆன்மா தூய்மையுருவது மட்டும் அல்லாமல் யாவும் அறிந்த எங்கும் நிறைந்த இறைவனின் பேரொளியாலும், அன்பாலும் ப்ரகாசிக்கும் என்பது உறுதி. திவ்யநாமத்தை இடையறாமல் ஓதும் பயிற்சி கீழ்ப்படியாமல் நிற்கும் மனதை இறைவனின் திருச்சித்ததிற்கும் வல்லமைக்கும் அடிமையாக்குகிறது. முதலில் திருநாமத்தை ஒருவன் ச்ரத்தை, நம்பிககை ஒருமனப்பாடு ஆகியவற்றுடன் ஜபம் செய்யும் போது முகமும் சரீரமும் ஒரு அஸாதாரண ஒளியுடன் ப்ரகாசிக்கிறது. அவனுடய மனம் விவேகத்தாலும், இதயம் அன்பாலும் நிரம்புகிறது. இவை யாவும் சாதகனின் மனதில் சத்வ குணம் மேலோங்குவதால் ஏற்படுகின்றன. பின்னர் நாம ஜபத்தை அதே உற்சாகத்துடன் பின்பற்றும்போது, அவன் இந்த ப்ரபஞ்சம் அனைத்தையும் இறைவனின் உருவமாகக் காண்கிறான். இறைவனுடன் ஒருமித்து அவன் எங்கும் இறைவனின் தரிசனத்தையே காண்கிறான். உண்மையில் நாமமே இறைவன். -ஸ்வாமி ராம்தாஸ்

No comments:

Linkwithin

Related Posts with Thumbnails